தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா..
தூத்துக்குடியில் மத்திய ஒன்றிய திமுக சார்பில் சமத்துதுவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
உழவர் திருநாளாம், தைப்பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் தைத் திங்கள் 1ஆம் நாள் (ஜன.14) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி தூத்துக்குடி ம்திய ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர். ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற விழாவில், ஒன்றிய அலுவலகத்தில் வண்ண கோலமிடப்பட்டு, கரும்புகளால் தோரணங்கள் அமைக்கப்பட்டது. பின்னர், மகளிரணியை சார்ந்த பெண்கள் பாரம்பரிய முறைப்படி புதுப்பானையில் பொங்கலிட்டனர். பின்னர் பொங்கல் பொங்கி வந்ததும், பொங்கலோ, பொங்கல் என ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட புத்தாடைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத்தலைவர் பாலசுந்தரம், துணைச் செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், ராஜ்குமார், ஏஞ்சலின் ஜெனிட்டா, பொருளாளர் ரமேஷ் விஜயகுமார், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன், வெயில்ராஜ், செல்வின், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் தென்னரசு. மாவட்ட மகளிரணி மரிய பொன்னம்மாள், மீனாட்சி, அன்னசெல்வி, ஒன்றிய மகளிரணி வரலட்சுமி, விஜயபாரதி, மாணவரணி சற்குணம், வழக்கறிஞரணி மகேந்திரன், தகவல்தொழில்நுட்ப அணி மணிகண்டன், மாநில பேச்சாளர் சண்முகநாராயணன், மாவட்ட சார்பு அணி சைமன், செல்வின் ஜெயக்குமார், மைக்கேல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments